அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி
பொது சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில் காணப்படுவதாக அரச தரப்பு அறிவித்துள்ளது.
இதன்படி, சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில் 3,519 வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa ) தெரிவித்துள்ளார்.
மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை
அடுத்தபடியாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 3,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமைச்சுகள், மாகாண சபைகளில் காணப்படும் மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கை 7,456 என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |