கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருக்கும் மக்கள் : நிலை தடுமாறும் அநுர அரசு
அண்மைய நாட்களாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு (Department of Immigration and Emigration) முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகியிருந்தாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தநிலையில், அதிகாலை முதலே நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும், பலர் அதிகாலை நான்கு மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.
இதையடுத்து, அடுத்த வாரத்திற்குள் 24 மணி நேர சேவை கடவுச்சீட்டு சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அத்தோடு, நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வரிசைக்கான பிண்ணனி என்ன என்பது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) பொருளியல் துறை பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி (M. Ganeshamoorthy) தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
மேலும், கடவுச்சீட்டு விவகாரம், அநுர அரசாங்கத்தின் கற்போதைய நிலை, நாட்டின் பொருளாதாரம், நாட்டின் எதிர்கால அரசியல் சூழ்நிலை மற்றும் அநுர அரசாங்கம் எதிர்நோக்கப்போகும் சிக்கல்கள் தொடர்பில் விரிவாக அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)