நீக்கப்படப்போகும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு
Sri Lanka Police
Sri Lanka Politician
Tiran Alles
By Sumithiran
பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத அரசியல்வாதிகள் மற்றும் பல தரப்பட்ட உயரதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் கடந்த வாரம் அரச புலனாய்வு சேவைக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த திரன் அலஸ், அரசியல்வாதிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள்.
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாதவர்களுக்கு
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாதவர்களுக்கு சுமார் ஐயாயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் இவ்வாறு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலைமை காரணமாக காவல்துறையினரின் பொது கடமைகளுக்கு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்