மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Batticaloa Sri Lanka Parliament Shanakiyan Rasamanickam SL Protest Eastern Province
By Sathangani Jul 17, 2023 08:39 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

மட்டக்களப்பில் புதிதாக திறக்கப்பட உள்ள 10 மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  கட்சியின் அங்கத்தவர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கிழக்கை அபிவிருத்தி செய்வதாகக் கூறியும் கிழக்கை மீட்கப் போவதாகக் கூறியும் அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் 

மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் | Protest Againist To License Bar Battigaloa

இதேவேளை சிறிலங்காவின்  சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் குறித்த மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்கள் இருக்கின்ற போதிலும், மேலும் மேலும் அப்பாவி மக்களது வாழ்வாதாரத்தைச் சுரண்டும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் குறித்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் மக்களுக்கு நலன் தருகின்ற அபிவிருத்திகளை மேற்கொள்வதை விடுத்து மக்களின் பணத்தைச் சுரண்டுவதிலும் மக்களை  மென்மேலும் துன்பத்தில் தள்ளுவதுமான செயற்பாடு கிழக்கில் தற்போது அரங்கேறி வருகின்றது.

மௌனம் சாதித்தல்

மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் | Protest Againist To License Bar Battigaloa

குறித்த மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சரின் நெருங்கிய சகா ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மதுபான சாலை அனுமதிப் பத்திர விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு ராஜாங்க அமைச்சர்களும் மௌனம் சாதிப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் இந்த மதுபானசாலை உரிமம் வழங்குவது தொடர்பாக தங்களுக்கு தொடர்பு இல்லை என்றால், அதை ஊடகம் மூலமாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவர்களது கடமையாகும்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதால், இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுகின்றது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவாக இருக்கின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

''இன்றைய தினம் வவுணதீவுப் பகுதியில் ஒரு சிறிய ஒரு எதிர்ப்பை தெரிவிப்பதற்காகவே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த மதுபான சாலைகளின் அனுமதி பத்திரங்கள் இரத்து செய்யாத பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்''  என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024