அரசாங்கத்திற்கு எதிராக நாளை மறுதினம் பாரிய எதிர்ப்பு - பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது
நாளை மறுதினம் பாரிய எதிர்ப்பு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவியை நீக்குவது தொடர்பில் தமக்கு நிலையான கருத்து இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
போராட்டத்தை வெற்றிகொள்ள பொது இணக்கப்பாடு

இந்த மாநாட்டில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இணைத்தலைவர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பிரகடனத்தில் ஆறு சிறப்பு அம்சங்கள்

போராட்டத்தை வெல்லும் பிரகடனம் ஆறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதோடு, இதன் வெற்றிக்காக சர்வ கட்சிப் போராளிகள் தம்மை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தனர்.
அவர்களின் ஜனநாயக ரீதியிலான அனைத்து கோரிக்கைகளுக்கும் மாற்றுக் கருத்து இன்றி தான் உடன்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் என்பது அரச தலைவருக்கு மட்டுமல்ல எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவரது நிறைவேற்று அதிகாரம் நாடாளுமன்றத்திற்கும் நீண்டு செல்வதாக தெரிவித்தார்.
எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவியை நீக்குவது தொடர்பில் தமக்கு நிலையான ஒரு கருத்து இருப்பதாக தெரிவித்தார்.
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்