தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Dharu
யாழ். தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று வியாழக்கிழமை (10) பௌர்ணமி தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துளளனர்.
காணி உரிமையாளர்கள்
இதன்போது விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன். சமத்துவக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், சட்டத்தரணி காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி