PTA யை இரத்து செய்வதற்கான உறுதி! நடைமுறை தொடர்பில் சட்டத்தரணி விளக்கம்

Sri Lankan Tamils Jaffna
By Theepan Feb 20, 2026 11:28 AM GMT
Report

இலங்கை அரசு PTA யை இரத்துச் செய்வதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மட்டத்தில் பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்திருந்தாலும், அது நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை என சட்டத்தரணி பெனிஸ்லாஸ் ருஷான் தெரிவித்துள்ளார்.

நடைமுறையில் இருக்கும் பயங்கரசாதச் சட்டத்தியும் உருவாக்கப்படும் அதற்கு ஈடான சட்டத்தினையும் இல்லாது செய்து மக்களின் மீது திணிக்கப்படும் அச்சுறுத்தல்களையும் அடக்கு முறைகளையும் நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்குடன் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கையின் மக்கள் நாடாளுமன்றம் என்ற அமைப்பு இன்று செயலமர்வொன்றை முன்னெடுத்தது.

குறித்த செயலமர்வில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி - இந்திய அரசிற்கு வடக்கிலிருந்து செய்தி

பலாலி விமான நிலைய அபிவிருத்தி - இந்திய அரசிற்கு வடக்கிலிருந்து செய்தி

தேசிய பாதுகாப்பு 

மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

PTA யை இரத்து செய்வதற்கான உறுதி! நடைமுறை தொடர்பில் சட்டத்தரணி விளக்கம் | Commitment To Abolish Pta

இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக 1979 ஆம் ஆண்டு 48 ஆம் எண் கொண்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஒரு தற்காலிகச் சட்டமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் அது 1982 இல் நிரந்தரச் சட்டமாக மாறியது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டங்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசாங்கங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

PTA இன் கீழ் நீதித்துறையின் மேற்பார்வை இல்லாமல் நபர்களை கைது, நீண்டகால தடுப்புக்காவல், சித்திரவதை, குறிப்பாக இன சிறுபான்மையினர், அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அடக்குமுறை செய்தல் போன்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் பதிவாகியுள்ளன.

1983-2009 உள்நாட்டுப் போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராகவும், 1988-89 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னனி மற்றும் மாணவர் இயக்கங்களுக்கு எதிராகவும், 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், 2022 போராட்டத்திற்குப் பிறகு போராட்டக்காரர்களுக்கு இந்தச் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசு PTA யை இரத்துச் செய்வதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மட்டத்தில் பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்திருந்தாலும், அது நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை.

ஈரானுக்கு பத்து நாட்கள் அவகாசம் அளித்த ட்ரம்ப்

ஈரானுக்கு பத்து நாட்கள் அவகாசம் அளித்த ட்ரம்ப்

PTA -ஐ ஒழிப்போம் என்ற போர்வை

இன்னிலையில் 2024 இல் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தேசிய மக்கள் சக்தி (NPP) PTA ரத்து செய்யப்படும் என்று மக்களுக்கு உறுதியளித்தது. அந்தக் கொள்கை அறிக்கைகளில், "பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களும் ரத்து செய்யப்படும்" என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

PTA யை இரத்து செய்வதற்கான உறுதி! நடைமுறை தொடர்பில் சட்டத்தரணி விளக்கம் | Commitment To Abolish Pta

இருப்பினும், PTA -ஐ ஒழிப்போம் என்ற போர்வையில், தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) முன்வைக்கப்பட்மை, மக்கள் ஆணைக்கு எதிரான செயலாக இருக்கின்றது.

அதுமட்டுமன்றி இலங்கையில் ஏற்கனவே தண்டனைச் சட்டக் கோவை, பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள்,அதன் உளவுத்துறை சேவைகள், பயங்கரவாத விசாரணைப் பிரிவுகள் மற்றும் சட்ட பொறிமுறைகள் இருப்பதால், தனித்தனி அடக்குமுறை பயங்கரவாதச் சட்டங்கள் தேவையில்லை.

PTA -வின் கீழ் பல ஆண்டுகளாக நியாயமற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நபர்கள் இருந்தாலும், அவர்கள் அனுபவித்த அநீதிகளுக்கு சமூக அல்லது சட்டரீதியான இழப்பீடுகள் ஏதும் கிடைக்கவில்லை.

இந்தச் சட்டங்கள் வரலாறு முழுவதும் மக்களை மிரட்டவும் அடக்குமுறைக்கான கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. PSTA நிறைவேற்றப்பட்டால், சாதாரண குடிமக்களின் கருத்து சுதந்திரம், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை மற்றும் தனியுரிமை என்பன கடுமையாக கட்டுப்படுத்தப்படும்.

எனவே, இந்தச் சட்ட வரைவு குறித்து பொதுமக்களை விழிப்புணர்வு செய்தல் நீதி அமைச்சு ஊடாக எதிர்ப்பு கருத்துகளை முன்வைத்தல் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு பொதுமக்களின் எதிர்ப்பினை தெளிவாக அறிவித்தல் சமூக ஊடகங்கள் மற்றும் பொது உரையாடல் மூலம் திறந்த விவாதத்தை முன்னெடுத்தல் என்பன அத்தியவசியமான செயற்பாடுகளாகும்.

இந்த சட்ட வரைவை தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே இலங்கையின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அனைத்து குடிமக்களின் சுதந்திரங்களையும் என்றும் இந்த செயலமர்வில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 psta சட்டமும் வேண்டாம் 

மேலும், வடக்கு கிழக்கு பொது அமைப்புக்களால் பயங்கர வாத எதிர்ப்பு சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பாதற்கு என கொண்டுவர இருக்கின்ற psta சட்டமும் வேண்டாம் என்று அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் கையெழுத்து போராட்டம் இன்று சந்நிதி முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், குரல் அற்றோரின் குரல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கொட்டடி கோமகன், தமிழர் கலைமன்ற இயக்குனர் கமலகாந்தன் உட்பட பொது அமைப்பு பிரதிநிதிகள் இணைந்து கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சந்நிதி முருகனை தரிசிக்க வந்த அடியவர்கள் பல நூற்றுக் கணக்கானவர்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டனர்.

செய்தி - எரிமலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025