தையிட்டியில் முளைத்துள்ள சட்டவிரோத கட்டடம் : மீண்டும் வெடித்த போராட்டம்

Tamils Jaffna Anura Kumara Dissanayaka SL Protest Selvarajah Kajendren
By Sathangani Mar 23, 2025 10:48 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.

சட்ட விரோத கட்டடம் அமைந்துள்ள பகுதியில் இன்று (23) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்களால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கட்டட திறப்பு விழா

இந்த நிலையில் குறித்த பகுதியில் அநுர அரசாங்கத்தின் அனுமதியோடு மீண்டும் ஒரு சட்டவிரோத கட்டடம் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடாத்தப்படுகிறது.

தையிட்டியில் முளைத்துள்ள சட்டவிரோத கட்டடம் : மீண்டும் வெடித்த போராட்டம் | Protest Against Thaiyiddi Vihra And Building

அனுமதியின்றி புதிதாக கட்டப்பட்டு இன்றையதினம் திறப்புவிழா செய்யப்படுகின்ற கட்டடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் (S. Kajendran), காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன் திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என்று பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி  (Hiniduma Sunil Senevi) அறிவித்திருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள மற்றைய சட்டவிரோதக் கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பற்றி எரியும் வெளிநாடு: 35 000 இலங்கையர்களின் நிலைமை என்ன..!

பற்றி எரியும் வெளிநாடு: 35 000 இலங்கையர்களின் நிலைமை என்ன..!

அரசின் கையாலாகாத தன்மை

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு மேலதிகமாக, அந்தப் பகுதியில் மிக இரகசியமான வகையில் வேறுசில சட்டவிரோதக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வந்ததாகவும் இராணுவத்தினர் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தையிட்டியில் முளைத்துள்ள சட்டவிரோத கட்டடம் : மீண்டும் வெடித்த போராட்டம் | Protest Against Thaiyiddi Vihra And Building

மேலும் இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதற்கு பதில் மாவட்டச் செயாளர் மருதலிங்கம் பிரதீபன் மறுப்புத் தெரிவித்திருந்ததுடன் தான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதாகவும், அவ்வாறான சட்டவிரோத கட்டடங்கள் எவையும் இல்லை என்று கூறியதாக சுட்டிக்காட்ப்படுகின்றது.


ஆனால், இராணுவத்தால் அமைக்கப்பட்டு வந்த அந்த சட்டவிரோத பௌத்த ஆக்கிரமிப்புக் கட்டடங்களே இன்று மத வழிபாடுகளுக்குப் பின்னர் கையளிக்கப்பட்டதாகவும் குறித்த கட்டடங்கள் பிக்குகள் தங்குவதற்கான மடாலயமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையில் தொடர்ச்சியாக கட்டிடங்கள் அமைக்கப்படுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தையே தடுத்து நிறுத்துவதற்குத் திராணியற்ற இந்த அரசாங்கம், எவ்வாறு திஸ்ஸ விகாரையை அப்புறப்படுத்தி, மக்களின் காணிகளை மக்களுக்கு உரியதாக்கும் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச சொத்துக்களை கையகப்படுத்தியோருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

அரச சொத்துக்களை கையகப்படுத்தியோருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025