அரச தலைவர் செயலகத்தை முற்றுகையிட்டு தமிழ் கட்சிகள் போராட்டம் (காணொலி)
தமிழர் பிரதேசங்களிலுள்ள காணிப் பிரச்சினை உள்ளடங்கலாக பல்வேறு பிரச்சினைக்களுக்கு தீர்வு காணும் வகையில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வினை புறக்கணித்து இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ல் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்மனோ கணேசன் உட்பட ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





