போராட்டத்தில் குதிக்கும் அரச சேவைகள் பொறியியலாளர்கள் சங்கம்
அரச சேவைகள் பொறியியலாளர்கள் சங்கம் இன்று(16) பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளது.
பொறியியல் சேவை உத்தியோகத்தர்கள் களப்பணிகளில் ஈடுபடும்போது எதிர்கொள்ளும் மேலதிக செலவுகளுக்கான கொடுப்பனவு தொடர்பான கோரிக்கை இம்முறை பாதீட்டில் கவனத்தில் கொள்ளப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டில் நிலவிய பொருளாதார நிலை
2024ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொறியியல் சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த களப்பணிக் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டதாக அந்தச் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

களப்பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தமது சொந்த நிதியில் கணிசமான தொகையைச் செலவிட வேண்டியுள்ளதாகவும், அதற்கான செலவுகளை ஈடுசெய்யும் வகையில் 75,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பள அதிகரிப்புக்கான கோரிக்கை அல்ல எனவும், களப்பணிகளின்போது உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் மேலதிக செலவுகளை ஈடுசெய்வதற்கான கொடுப்பனவையே கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |