விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி தலவாக்கலையில் போராட்டம்

Nuwara Eliya Sri Lanka Protest
By Thirumal Nov 02, 2025 11:03 AM GMT
Report

நுவரெலியா - தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்றிரவு (01) முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

செல்வநாதன் புஸ்பகுமார் என்ற 28  வயதான இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (31) இரவு உயிரிழந்தார்.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

இரு இளைஞர்கள் காயம்

இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு இளைஞர்கள் குழு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதான பாதையில் வருகை தந்த ஜீப் வண்டி ஒன்று திடீரென இளைஞர்கள்மீது மோதியுள்ளது. இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி தலவாக்கலையில் போராட்டம் | Protest Demanding Justice For The Deceased Youth

படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய சாரதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

NPPயால் வடமாகாண சபையை கைப்பற்ற முடியாது : அடித்துக்கூறும் சிவாஜிலிங்கம்

NPPயால் வடமாகாண சபையை கைப்பற்ற முடியாது : அடித்துக்கூறும் சிவாஜிலிங்கம்

வீதியை மறித்து போராட்டம்

இந்தநிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் நுவரெலியாவில் இருந்து நேற்று தலவாக்கலை பகுதியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி தலவாக்கலையில் போராட்டம் | Protest Demanding Justice For The Deceased Youth

இதன்போது பல முச்சக்கர வண்டிகளும் அணிவகுத்து வந்த நிலையில் சடலம் தலவாக்கலை நகரை வந்தடைந்த பின்பு உறவினர்கள், நண்பர்கள் உட்பட பெருமளவானோர் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சாரதிக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன் சுமார் அரை மணிநேரத்துக்கு மேலாக போராட்டம் நீடித்தது.

சம்பந்தப்பட்ட சாரதிக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து நிலைமை சீரானதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன இறக்குமதிக்கான கடன் வரம்பு அதிகரிப்பு : பிரதி அமைச்சர் அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கான கடன் வரம்பு அதிகரிப்பு : பிரதி அமைச்சர் அறிவிப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021