பருத்தித்துறை காணிகளை விடுவிக்கக் கோரி பாரிய போராட்டம்! ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள மனு
யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தியும், ஆயுதப் படைகள் அங்கிருந்து வெளியேறக் கோரியும் பிரம்மாண்ட கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்போது, தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றக் காணி, பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் பருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதி ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் ஆரம்பமாகி, பேரணியாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தை சென்றுடைந்துள்ளது.
கோரிக்கை மனு
அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மனு கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், நகர சபை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26