சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினம்: வெடிக்கவுள்ள போராட்டம்
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலும் (Jaffna) மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும் (Batticaloa) இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
பாரிய போராட்டம்
பேரணி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும், வடமாகாணத்தில் சங்கிலியன் நினைவிடத்தில் தொடங்கி செம்மணி வரை பேரணியாக நடைபெறவுள்ளது.
இப் பேரணியில் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள், தொழிலாளர் சங்கங்கள், கிராமிய அமைப்புகள் மற்றும் பொது மக்கள் அனைவருரையும் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


