மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

Mannar Sri Lanka SL Protest Nothern Province
By Kathirpriya Oct 26, 2023 10:58 AM GMT
Report

மன்னார் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (26) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நானாட்டான் - முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினரால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் எழுத்து மூலமும் நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் இதுவரையில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் காரணத்தால் குறித்த போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று இடம் பெற்றுள்ளது.   

இலங்கையின் 16ஆவது இராணுவத் தளபதி காலமானார்

இலங்கையின் 16ஆவது இராணுவத் தளபதி காலமானார்

பொருளாதார இழப்புக்கள்

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், நானாட்டான் - முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு, இலுப்பை கடவை பகுதிக்கு தமது கால்நடைகளை கொண்டு சென்று பல்வேறு விதமான துன்ப துயரங்களையும் கால்நடை இழப்புக்களையும், மனித இழப்புக்களையும் சந்திப்பதாகவும், பாரிய பொருளாதார இழப்புக்களையும் சந்திப்பதாகவும், அப்பகுதியில் உள்ளவர்களுடன் எமக்கு முரண்பாடுகளும் ஏற்படுவதாகவும் இதன்போது அவர்கள் தெரிவித்திருந்தனர்.

பாடசாலைகளுக்கு விடுமுறை : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறை : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் | Protest For Own Land Mannar District Secretariat

ஆகவே கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பலவருடமாக கோரிக்கை விடுத்ததன் படி பலமுறை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் நடை முறைப்படுத்தப்படாமல் இருப்பதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 12 ஆம் திகதியன்று வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதே வேதனைக்குரிய விடயம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேய்ச்சல் தரை நிலம் ஒதுக்குவது தொடர்பான விடயத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றார்கள் என்பது வெளிப்படையாகவே புலனாகின்றது, எனவே உடனடியாக எமக்குரிய மேச்சல் நிலத்தை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்ததோடு,மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.  

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் | Protest For Own Land Mannar District Secretariat மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் | Protest For Own Land Mannar District Secretariat மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் | Protest For Own Land Mannar District Secretariat மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் | Protest For Own Land Mannar District Secretariat மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் | Protest For Own Land Mannar District Secretariat மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் | Protest For Own Land Mannar District Secretariat மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் | Protest For Own Land Mannar District Secretariat

சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றம்: இலங்கையும் பிரித்தானியாவும் எட்டிய ஒப்பந்தம்

சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றம்: இலங்கையும் பிரித்தானியாவும் எட்டிய ஒப்பந்தம்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026