இடமாற்றப்பட்ட கணித ஆசிரியர்... பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது : வெடித்த மக்கள் போராட்டம்

Sri Lanka Police Colombo Puttalam SL Protest School Children
By Sathangani May 09, 2025 10:09 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

புதிய இணைப்பு

கொழும்பு - பம்பலப்பிட்டி பெண்கள் பாடசாலை மாணவியின் மரணத்திற்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் கணித பாட ஆசிரியரை கொழும்பிலிருந்து புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

குறித்த போராட்டம் புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு முன்பாக இன்று (09) காலை இடம்பெற்றது.

டில்ஷி அம்ஷிகா எனும் மாணவி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், சந்தேக நபராக கருதப்படும் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

பாரிய குற்றச்சாட்டு தொடர்புடைய ஆசிரியர்

மேற்படி இடமாற்றம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரினால் கடந்த 7ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த இடமாற்றம் தொடர்பாக கொழும்பு - மற்றும் வடமேல் மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களுக்கும், கொழும்பு மற்றும் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் குறித்த இரண்டு அதிபர்களுக்கும் கடிதத்தின் பிரதிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இடமாற்றப்பட்ட கணித ஆசிரியர்... பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது : வெடித்த மக்கள் போராட்டம் | Protest In Colombo For Justice School Girl Died

இந்த நிலையில், பாரிய குற்றச்சாட்டு ஒன்றுடன் தொடர்புடைய கணித பாட ஆசிரியரை பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்பதை வலியுறுத்தி புத்தளம் மக்களால் மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் என நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திதின் போது ''சீர் திருத்தப் பள்ளி அல்ல, புத்தளம்'', ''அநீதியான நியமனத்தை நீதியாக எதிர்க்கிறோம்'', ''ஒழுக்கம் கெட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்'', ''இடைநிறுத்தப்பட வேண்டிய ஆசிரியர்'', 'இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டிக்கிறோம்'', ''தவறு செய்து தண்டிக்கப்பட வேண்டிய அரச அதிகாரிகளின் சிறைச்சாலை அல்ல புத்தளம்'', 'புத்தளம் இனியும் இதனை அனுமதிக்காது'' இவ்வாறான மூன்று மொழிகளில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு புத்தளம் மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய பின்னர், மன உளைச்சலுக்கு உள்ளாகி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியின் மரணத்திற்கு நீதி கோரி மற்றுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக தற்போது நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.

“அதிபரே வெளியே வா”, “அதிபரை கைது செய்”, “இறுதி வரை போராடுவோம்”, “கைது செய், கைது செய், கெட்டவனை கைது செய்”, “சங்கரனை கைது செய்” “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என்ற கோசங்களையெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இடமாற்றப்பட்ட கணித ஆசிரியர்... பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது : வெடித்த மக்கள் போராட்டம் | Protest In Colombo For Justice School Girl Died

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் புகைப்படத்துக்கு செருப்பால் அடித்தும் தமது எதிர்பபை வெளிப்படுத்தினர்.

இந்தநிலையில் பாடசாலைக்கு முன்னால் உள்ள போக்குவரத்துப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு மாற்று வழி போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முதலாம் இணைப்பு

கொழும்பில் (Colombo) தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என கோரி கொழும்பில் இன்று (08) காலை குறித்த போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் தமிழரசு கட்சி பாரிய பின்னடைவு...! சத்தியலிங்கம் எம்.பி வசிக்கும் மாநகர சபையிலும் தோல்வி

வவுனியாவில் தமிழரசு கட்சி பாரிய பின்னடைவு...! சத்தியலிங்கம் எம்.பி வசிக்கும் மாநகர சபையிலும் தோல்வி

எதிர்ப்பை வெளியிட்ட மக்கள் 

கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில் ஆரம்பமான இந்தப் போராட்டம் தொடர்ந்து இராஜேஸ்வரி கல்வி நிலையத்திற்கு பேரணியாக சென்று அங்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இடமாற்றப்பட்ட கணித ஆசிரியர்... பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது : வெடித்த மக்கள் போராட்டம் | Protest In Colombo For Justice School Girl Died

அதன்பின்னர் கொட்டாஞ்சேனை கல்பொத்தானையில் அமைந்துள்ள  உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு பேரணியாக சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் இந்தச்சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பபட்ட அனைவருக்கும் தகவல்களை தெரிவிப்பதாக போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் உறுதியளித்தனர்.

இறுதியாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இறந்த மாணவிக்கு தத்தமது சமய அனுட்டானங்களின் படி ஆத்ம சாந்தி பிரார்த்தனையை நிகழ்த்தினர்.

இதேவேளை பேராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025