கொழும்பில் பதற்றமான சூழல்!! காவல்துறை, இராணுவம் குவிப்பு (படங்கள்)
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு காலி முகத்திடலிலுள்ள அவரது அலுவலகத்திற்கு முன்பாக பாரிய அளவில் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அரச தலைவர் அலுவலகத்திற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புக் கடவைகளை கடந்து அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர்.
எனினும் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தும் தீவிர முயற்சியால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதில் சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்களும் இணைந்துகொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
அரச தலைவர் அலுவலகத்திற்கு முன்பாக அதிகளவிலான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



