நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் பாரிய போராட்டம் (படங்கள்)
colombo
protest
parliament
By Vanan
நாடாளுமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இப்போராட்டம் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த இப்போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இப்போராட்டத்தின் போது காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டு போராட்டக்கார்களை கலைக்க முற்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் நடைபெற்று கொண்டிருந்த நிலையிலேயே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி