மீண்டும் தலைநகரில் வெடிக்கும் போராட்டங்கள்: சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்றம்!
Parliament of Sri Lanka
Sri Lankan protests
Sri Lanka Fuel Crisis
By Kanna
பத்தரமுல்லை-தியத்த உயன பகுதியில் பெட்ரோலிய வளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற வீதிக்குள் நுழைய முற்பட்ட போதே இவ்வாறு காவல்துறையினரால் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றை அண்மித்த வீதிகளுக்கு தற்காலிக பூட்டு
இந்நிலையில், நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொல்துவ சந்தி, ஜப்பான் நட்புறவு வீதி, பத்தரமுல்லை வீதிகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்