நடைமுறைக்கு வந்த புதிய எரிபொருள் விநியோக முறையை எதிர்த்து மக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் வழங்கும் நடைமுறை தொடர்பில் மாற்றம் கொண்டுவந்ததை எதிர்த்தே குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுமுதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள இணையம் மூலம் விண்ணப்பிக்குமாறு புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய நடைமுறை
எரிபொருள் கிடைக்கப்பெறும் போது பொதுமக்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான திகதி, நேரம் என்பன பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலமாக அறிவிக்கப்படும் எனவும் பொதுமக்கள் குறித்த நேரத்தில் தங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் மேற்குறியவாறு புதிதாக நடைமுறைக்குவந்த எரிபொருள் விநியோக முறையை எதிர்த்தே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய எரிபொருள் முறைமை மூலம் பாதிப்பு
கடந்த நான்கு நாட்களுக்கு மேலதிகமாக எரிபொருள் வரிசையில் நிற்பவர்கள் புதிய எரிபொருள் முறைமை மூலம் பாதிக்கப்படுவதாகவும் சகல தரப்பினராலும் இவ்வாறு இணையம் மூலம் எரிபொருளுக்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் குற்றம் சுமத்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஏ9 வீதி வழியான போராட்ட போக்குவரத்து தற்போது தற்காலிகமாக தடைப்பட்டு உள்ளது.
