வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி)

Mullaitivu Sarath Weerasekara
By Vanan Jul 11, 2023 08:06 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதித்துறையிலுள்ள தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராக வட மாகாணத்தில் இன்று சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையின் கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா கடந்த வாரம் சென்றிருந்தார்.

நீதிபதியின் வருகைக்கு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இடையூறு விளைவித்ததையடுத்து, நீதிமன்ற விசாரணைகளில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாதென எச்சரித்து அவரை நீதிபதி அங்கிருந்து வெளியேற்றியிருந்தார்.

இதனையடுத்து, தமது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களுக்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் சரத் வீரசேகர நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார்.

குருந்தூர் மலையில் இருந்து தம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுவதனால், பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணையவேண்டும்' என சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வடக்கு, கிழக்கைச் சேர்ந்த சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். 

முல்லைத்தீவு

இதன்படி, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் இன்று(11) பணி விலகல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court  

யாழ்ப்பாணம்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம் பணி விலகல் போராட்டத்தை மேற்கொண்டனர்.

யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காது இருக்க தீர்மானித்ததாக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்தார்.

சரத் வீரசேகரவின் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாள கண்டனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கண்டனப் பேரணியில் தமது சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court


மட்டக்களப்பு

நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து இன்று மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்ததுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தினையும் முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தலைமையில் இந்த போராட்டமும் கண்டன ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியில் உள்ள நீதிவான் நீதிமன்றம்,மாவட்ட நீதிமன்றம், மேல்நீதிமன்றம் ஆகியவற்றின் வழக்குகளில் பங்குகொள்ளாது சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்றிலிருந்து பேரணியாக வந்து நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

நீதித்துறையின் சுதந்திரத்திற்கு குரல்கொடுப்போம், இனவாதத்தை கக்காதே, நீதித்துறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூணாகும், நீதித்துறையில் இனவாதத்தை கக்காதே, நீதித்துறையினை அச்சுறுத்தாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட மும்மொழிகளிலுமான பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் 

மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம்(11) பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணி விலகல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணி விலகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று(11) காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சமூகமளித்த சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்ததோடு, முல்லைத்தீவில் இடம்பெறும் போராட்டத்திலும் கலந்துகொள்ள முல்லைத்தீவிற்கு சென்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினத்துக்கான வழக்கு விசாரணைகள் பிறிதொரு தினத்திற்கு தவணையிடப்பட்டது.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

அம்பாறை

அம்பாறை - கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் இன்று(11) ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பணி விலகல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பணி விலகல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பல்வேறு கோசங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் பணி விலகல் போராட்டம் (காணொளி) | Protest In Front Of Mullaitivu Court

ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024