அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜெனிவாவில் கிளர்ந்தெழுந்த சிங்கள மக்கள் (படங்கள்)
ஜெனிவாவில் சிங்கள மக்களும் போராட்டம்
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் சத்தியாககப் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அடக்குமுறையை நிறுத்து, போராட்டத்தை தொடாதே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுதலை செய், நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழி, போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய், போன்ற கோசங்களை ஏந்தியவாறு ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் பெருமளவானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதில் சட்டத்தரணி நுவான் போபகே, சமூக ஆர்வலர் ஷெஹான் மலேகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
போராட்டகாரர்களை விடுவிக்க கோரி கோஷம்
இலங்கை அரசாங்கம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை, கடத்தல், சிறைபிடித்தல் மற்றும் அச்சுறுத்தல், தடுப்பு நடவடிக்கையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உட்பட மூன்று மாணவர் செயற்பாட்டாளர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவுகளை (DO) பிறப்பித்ததாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக இங்குள்ள அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

