ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்!

Human Rights Council United Nations Geneva Sri Lanka
By Kalaimathy Sep 13, 2022 12:57 PM GMT
Report

சிறிலங்கா மீதான ஜெனிவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளன.

சர்வதேச மன்னிப்புசபை, ஃபோரம் ஏசியா, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு ஆகிய அமைப்புக்களே இவ்வாறு  வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான, தற்போதைய ஆணைகளை வலுப்படுத்தும் மற்றும் இலங்கையில் சீரழிந்து வரும் மனித உரிமை நிலைமைகளை கண்காணிக்கும் வகையில் வலுவான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதம்

ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்! | Sri Lanka United Nation Human Rights Geneva Pta

இந்த தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்று குறித்த நான்கு அமைப்புக்களும், பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவது உட்பட, நடப்பு துஷ்பிரயோகங்களுக்குத் தீர்வு காணவும் இலங்கைக்கு இந்தத் தீர்மானத்தின் மூலம் அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளன.

இலங்கை, கடுமையான பொருளாதார, அரசியல் மற்றும் மனித உரிமைகள் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கையில் கடந்தகால சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக நீதியைக் கோரி வருகின்றனர்.

அதே நேரத்தில் அடுத்தடுத்த சிறிலங்கா அரசாங்கங்கள் வாக்குறுதிகளை மீறி, பொறுப்புக்கூறலைத் தடுத்து, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை உயர் பதவிக்கு உயர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில், இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பயங்கரவாத சட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் 

ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்! | Sri Lanka United Nation Human Rights Geneva Pta

இலங்கை தொடர்பான தமது அறிக்கையில், ஆழ்ந்த இராணுவமயமாக்கல், நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் இல்லாமை, தண்டனையின்மை என்பன கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கான சூழலை உருவாக்கியது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் விபரித்துள்ளார்.

எனவே இலங்கைக்குள் பொறுப்புக்கூறல் இல்லாத நிலையில், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர்களை சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணை செய்ய வேண்டும் என்றும், வெளிநாடுகளில் உள்ள திருடப்பட்ட சொத்துக்களை கண்டுபிடித்து முடக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், இடைக்காலத்தில் அதன் பயன்பாட்டிற்கு உடனடித் தடை விதித்தல், சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்தல், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படாத குற்றச்சாட்டுகளை எதிர்நோக்காத அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபையின் தெற்காசிய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா கோரியுள்ளார்.

இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மனித உரிமைகள் பேரவையில் பல வாக்குறுதிகளை வழங்கின. எனினும் அவை முறியடிக்கப்பட்டன அல்லது மறுக்கப்பட்டன என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே உறுப்பு நாடுகள் இலங்கைக்கு அதன் உறுதிப்பாடுகள் மீது அழுத்தம் கொடுப்பதுடன், தற்போதைய துஷ்பிரயோகங்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யாமினி மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026