சிங்கள அரசு தமிழர்களுக்கான சரியான தீர்வை தராது : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Mannar Sri Lanka SL Protest
By Shalini Balachandran May 30, 2024 08:37 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தராத சிங்கள அரசு தமிழர்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லையென மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் (Mannar) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இன்று (30) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

யாழில் 10 வயது மாணவிகளிடம் ஆசிரியரின் முறைகேடு: எடுக்கப்பட்ட நடவடிக்கை

யாழில் 10 வயது மாணவிகளிடம் ஆசிரியரின் முறைகேடு: எடுக்கப்பட்ட நடவடிக்கை

களப்பு நீதிமன்றம்

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் ஆனால் அரசாங்கம் இதுவரை எமக்கு உரிய தீர்வை வழங்கவில்லை.

சிங்கள அரசு தமிழர்களுக்கான சரியான தீர்வை தராது : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் | Protest In Mannar

தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது மேலும் களப்பு நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அரசு கூறுகிறது.

எமக்கு களப்பு நீதிமன்றத்தில் நம்பிக்கையே இல்லை அத்தோடு எமது ஒரே முடிவு சர்வதேச விசாரணையே எமக்கு தேவை.

தாயக சமூக சீரழிவுகளை தடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற இரும்புக் கரங்களே தேவை: விக்னேஸ்வரன்

தாயக சமூக சீரழிவுகளை தடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற இரும்புக் கரங்களே தேவை: விக்னேஸ்வரன்

சர்வதேச விசாரணை

வேறு எந்த தீர்விலும் எமக்கு நம்பிக்கை இல்லை எனவே எமக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் இந்த நாட்டின் அதிபரே இப்பிரச்சினைக்கு காரணமாக இருந்தவர்.

சிங்கள அரசு தமிழர்களுக்கான சரியான தீர்வை தராது : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் | Protest In Mannar

தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இன்று பல வருடங்கள் கடந்து விட்டது ஆனால் இதுவரை ஒரு வித அனுசரணையும் அவர் செய்யவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை அத்தோடு மீண்டும் அவர் அதிபராக வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்பதில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.

யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் : இளைஞர் கைது

யாழில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் : இளைஞர் கைது

அதிபர் தேர்தல் 

அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை.

சிங்கள அரசு தமிழர்களுக்கான சரியான தீர்வை தராது : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் | Protest In Mannar

இவர்கள் மூவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தொடர்பில் எதையும் செய்ய மாட்டார்கள் அத்தோடு யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்காத சிங்கள அரசு எங்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை.

எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

யாழில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025