யாழில் 10 வயது மாணவிகளிடம் ஆசிரியரின் முறைகேடு: எடுக்கப்பட்ட நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் (jaffna) 10 வயது மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவருக்கு பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையானது, வட மாகாண கல்வி அமைச்சினால் விதிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் , தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவிகளிடம் தவறாக நடந்துக் கொண்டதாக பாதிக்கபட்ட மாணவி ஒருவரின் பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியருக்கு பிணை
இதன்படி, அந்த முறைப்பாட்டின் பிரகாரம் ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபாரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கபட்டுள்ள நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணித்தடை
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கபட்டு, விசாரணை அறிக்கை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்ட ஆசிரியருக்கு பணியினை தொடர தடை விதிக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |