மன்னாரில் 27 ஆவது நாளாகவும் போராட்டம்: ஆதரவாக குவித்த பெருந்திரள் மக்கள்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம்(28) 27 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புதுறை துறை கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை போராட்டத்திற்கு வழங்கியுள்ளனர்.
அத்துடன், இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் முத்தரிப்புத்துறை கிராமத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெரியவர்களும் கலந்து கொண்டிருந்துள்ளனர்.
பதாகைகள்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும், நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு,அரசே எமது உயிரோடு விளையாடதே, காற்றாலை அமைத்து எமது குலகடுவருக்காதே, சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதி இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாரு ஊரவலமாக சென்று தமது எதிர்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





