திருகோணமலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்
அரிசி விலையை குறைக்க கோரி திருகோணமலை நகர சபைக்கு முன்னால் இன்று (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது,"பட்டினி சாவு எமக்கு வேண்டாம், இலங்கை அரசாங்கம் அரிசி விலையை குறைக்க வேண்டும்" போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலை குறைப்பு
இதன்போது, மக்கள் போராட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “பொருளாதார சுமையில் இருந்து மக்களை இந்த அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.
பொருட்களுக்கான விலையை குறைக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இதனை புரிந்து மக்களுக்காக செயற்பட்டு விலைகளை குறைக்க முன்வர வேண்டும்.
வாக்குகளுக்காக மாத்திரம் மக்களிடம் வராமல் மக்கள் பிரச்சினைகளை பார்க்க வேண்டும் எதிர்வரும் தேர்தல் அதிபர் தேர்தலா அல்லது நாடாளுமன்ற தேர்தலா என உள்ளது.
அரிசிக்கான நிர்ணய விலை
டொலர் பெறுமதி அதிகரிக்கும் போது பொருட்களின் விலை அதிகரிக்கிறது டொலரின் பெறுமதி குறையும் போது ஏன் பொருட்களின் விலை குறைவதில்லை.
அரிசிக்கான நிர்ணய விலையை வகுத்து மக்களை காப்பாற்றுங்கள்" எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இதன் போது,திருகோணமலை நகர் பகுதியில் இது தொடர்பான துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டு வாசகங்களும் பல இடங்களில் ஒட்டப்பட்டன.
இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்