குற்றப் புலனாய்வு திணைக்களத்தை முற்றுகையிட்ட மக்கள்! தொடரும் பதற்றம்(காணொளி)
CID - Sri Lanka Police
Johnston Fernando
Sri Lankan protests
Sri Lankan political crisis
Galle Face Riots
By Kanna
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு வலியுறுத்தி கோட்டை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வெளியே பொது மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களே கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பு இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நுழைவாயில் பகுதியில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, காலி முகத்திடலில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்