சமஷ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டம்
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் மனுக்களும் கையளிக்கப்பட்டிருந்தன.
வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வினை வலியுறுத்திய 100 நாட்கள் செயல் முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த பேராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி வடக்குகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவினால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அதிகார பகிர்வு எமக்கு வேண்டும், சமஷ்டி அதிகார பகிர்வை உறுதிசெய் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம்
கிளிநொச்சி
திருகோணமலை
மன்னார்
வவுனியா
இதேவேளை, மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.