மிரட்டல்களுக்கு மத்தியிலும் தொடரும் பேரணி! சதிகளை முறியடித்து நகரும் போராட்டம் - சர்வதேச ஊடகம் விபரிப்பு

srilanka protest poththuvilpolikandi
By Vasanth Feb 06, 2021 05:32 AM GMT
Report

  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியின் போது அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் தடைகளை ஏற்படுத்திய சிவில் குழுவினர் கைது செய்யப்படவில்லை என்று சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தினர் இணைந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை ஒழுங்குசெய்து பொது மக்களின் ஆதரவோடு இன்று மன்னாரை சென்று அடைகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் பேரணியை குழப்புவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அந்த ஊடகம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் இந்த குழுவினரோடு இருப்பது சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அனுமதிக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக விபரித்துள்ளது.

எனினும், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள் இருந்த போதிலும் மக்கள் மத்தியில் இந்த பேரணி பெரும் ஈர்ப்பை பெற்றுள்ளதாகவும், அதிகளவான மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விசேடமாக இந்த பேரணியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த நடைப்பயணத்தில் எந்தப் பங்கையும் செய்ய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலிலிருந்து கடந்த 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி எதிர்வரும் 7ம் திகதி பொலிகண்டியில் முடிவடையவுள்ளது.

பின்வரும் விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த பேரணி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது தமிழர்களின் கோவில்களை அழித்த பின்னர் பௌத்த விகாரைகளை நிறுவுவதன் மூலம் தமிழ் பகுதிகளில் நில அபகரிப்பு மற்றும் தமிழின் பாரம்பரிய, வரலாற்று இடங்களை சிங்கள பகுதிகளாக மாற்றுவது. கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்கள் குடும்பங்களின் விருப்பத்திற்கு எதிராகவும், இஸ்லாமிய போதனைகளுக்கு எதிராகவும் தகனம் செய்யப்படுகிறார்கள்.

மலையகத்தில் உள்ள தமிழர்கள் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை. யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, தமிழ் பகுதிகளின் இராணுவமயமாக்கல் தொடர்கிறது, சிங்கள மக்களுக்கு ஆதரவாக தமிழர்களின் வரலாற்று அடையாளம் அழிக்கப்படுகிறது, தமிழர் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள். தமிழ் கால்நடை உரிமையாளர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், அவர்கள் வசிக்கும் பகுதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களின் கால்நடைகள் கொல்லப்படுகின்றன.

தமிழ் இளைஞர்களை குற்றச்சாட்டு அல்லது விசாரணையின்றி சிறையில் அடைக்க பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிங்களவர்களுக்கு அரசாங்கம் தவறாமல் மன்னிப்பு வழங்கியுள்ளது, ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு பதில் அளிக்க மறுக்கிறது. தமிழர்கள் போரின் போது கொல்லப்பட்ட தங்கள் உறவுளை நினைவுகூரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளனர், இது நினைவு நிகழ்வுகளை மறுப்பதன் மூலமும், இறந்தவர்களின் கல்லறைகளை அழிப்பதன் மூலமும், நினைவுச் சின்னங்களை இடிப்பதன் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை வெளிக்கொண்டுவரும் தமிழ் ஊடகவியலாளர்களையும், இந்த முறைகேடுகளை எதிர்க்கும் தமிழ் சமூக ஆர்வலர்களையும் அரசாங்கம் குறிவைக்கிறது என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Tags : #Protest #Poththuvil #Polikandi 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026