யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
Jaffna
SL Protest
Strike Sri Lanka
Drugs
By Sathangani
யாழ்.மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) ஆகிய இரு தினங்களும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி. தர்சன் இதனை அறிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார கட்டமைப்பை பாதிக்கும். எனவே அதனை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

மரண அறிவித்தல்