அரசுக்கு கடும் நெருக்கடி - நாடாளுமன்ற சூழலிலும் உருவானது “ஹொரு கோ கம” (திருடர்களை துரத்தும் கிராமம்)(photo)
நாடாளுமன்ற சூழலில் பத்தரமுல்லை - பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முன்னெடுத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எனினும், பொல்துவ சந்தி நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் போராட்டக்காரர்கள் இன்னும் அங்கேயே உள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து போராட்டங்களை நடத்த தற்காலிக கூடாரங்களை அமைத்து வருகின்றனர்.
போராட்டங்களைத் தடுக்க காவல் துறையினரின் நிரந்தரத் தடுப்புகள் இப்பகுதியில் உள்ளன. எனினும் அப்பகுதியை ஆக்கிரமித்து நீண்டகால எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தயாராகி வருவதாகக் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தப் பகுதிக்கு மாணவர்களால் “ஹொரு கோ கம“ (திருடர்களை துரத்தும் கிராமம்) என பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரதமர் அலுவலகம் மற்றும் அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் கோட்டா கோ கம மற்றும் மைவ கோ கம என பெயரிட்டு போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










