கல்முனையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்
கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லையெனவும் மற்றும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டமானது ஞாயிற்றுக்கிழமை(31) இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இக்கவனயீர்ப்பு போராட்டமானது வணக்கத்திற்குரிய போதகர் கிருபைராஜா தலைமையில் மாலை வேளையில் இடம்பெற்றதுடன் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கை
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருபலிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |