சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம்: மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கில் சர்வதேச நீதி கோரி மாபெரும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
அந்தவகையில், எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த நிகழ்விற்கு ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு (Mullaitivu) ஊடக அமையத்தில் இன்று (27) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உறவுகளுக்கான நீதி
அவர் மேலும் கூறுகையில், “கடந்த 15 ஆண்டுகளாக இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டு, வீடு வீடாக சென்று இழுத்து செல்லப்பட்டு, மற்றும் தாமாக சரணடைந்த உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வடக்கு கிழக்கில் பல பிரதேசங்களில் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
எமது உறவுகளுக்கான நீதி எமக்கு கிடைக்வேண்டும் என்று இரவு பகலாக போரடி வருகின்றோம். இந்த நாட்டில் எந்த ஒரு பிரச்சினைக்கும் இதுவரைக்கும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை.
ஆனால் நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் பல ஆணைக்குழுக்களை அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவைகள் ஊடாக வலுக்கட்டாயமாக பதிவுகள் மேற்கொண்டும் இதுவரை தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை.
ஓ.எம்.பி.அலுவலகம்
கடைசியாக ஓ.எம்.பி.அலுவலகம் ஊடாக எங்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோம் என்றும் சொல்லி அவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி வருகின்றது. எமது வீதியில் போராடிய தாய்மார்கள், தந்தைமார்கள் இறந்துள்ளார்கள். அதற்கான நீதியும் கிடைக்கவில்லை. சிறுபிள்ளைகளை கையளித்திருந்தோம் அந்த பிள்ளைகளுக்கான நீதியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் (Jaffna) ஆரியகுளம் சந்தியில் இருந்து பாரிய போராட்டம் ஆரம்பிக்கவுள்ளது இதற்காக அனைத்து உறவுகளும் எமக்காக குரல் கொடுக்கவேண்டும்.
வர்த்தக சங்கங்கள்
அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கங்கள் பொது அமைப்புகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுப்பதுடன், கிழக்கில் திருகோணமலையிலும் (Trincomalee) போராட்டம் அதே நாள் நடைபெறுகின்றது. இதற்கான ஆதரவினையும் வழங்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்." என்றார்.
ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவித்த அவர், “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இதுவரைக்கும் ஐனாதிபதியாலோ அல்லது அரசியல்வாதிகளாலோ எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இதே நேரத்தில் ஐனாதிபதி தேர்தலை பற்றி எங்களிடம் கேட்டால் வெறுப்புத்தான் உள்ளது எவர் வந்தாலும் அவர்கள் எங்கள் உறவுகளை கடத்திசென்றவர்களையோ, கொலை செய்தவர்களையோ காப்பாற்றுபவர்கள்தான் ஐனாதிபதியாக வருவார்கள். அப்படி முடிந்தால் குற்றம் செய்தவர்களை சர்வதேச கூண்டில் ஏற்றினால் அவர்களை நாங்கள் வரவேற்கின்றோம்.
சை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |