இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாகாண பங்களிப்புக்கள் - வடமாகாணத்தின் நிலை - மத்திய வங்கி அறிக்கை!
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாகாணங்களின் பங்களிப்புக்கள் வெளியாகியுள்ளன.
குறித்த அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒப்பிடுகையுடன் குறித்த அறிக்கையை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
மாகாணங்களின் பங்களிப்பு வீதம்
அந்தவகையில், மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேல்மாகாணம் அதிக பங்களிப்புக்களை வழங்கி முதலிடத்தில் உள்ளது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல்மாகாணம் 42.6 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.
இதேவேளை, 11.1 மற்றும் 10.1 சதவீத பங்களிப்புடன் வடமேற்கு மாகாணம், மத்திய மாகாணம் ஆகியன முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது.
வட மாகாணத்தின் நிலை
மத்திய வங்கியின் குறித்த அறிக்கையில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகுறைந்த பங்களிப்புக்களை வழங்கிய மாகாணமாக வட மாகாணம் உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வட மாகாணத்தின் பங்களிப்பு 4.2 வீதமாக உள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
