மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசு சாணக்கியனுக்கு பதில்
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாக தெரிவிக்க முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள், பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (11) நடைபெற்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மாகாணசபைத் தேர்தலை எப்போது நடத்த தீர்மானித்துள்ளீர்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், பொது நிர்வாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதன்போது சாணக்கியனுக்கு பதிலளித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
தேர்தலை நடத்த முடியாது
இருப்பினும் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாக குறிப்பிட முடியாது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை தொடர்ந்து நிர்வகிக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை.
பழைய தேர்தலிலும் தேர்தலை நடத்த முடியாது, புதிய தேர்தல் முறையிலும் தேர்தலை நடத்துவதில் சிக்கல் காணப்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம்.
மாகாணசபை தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் காணப்படுகிறது.
சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டதன் பின்னர் தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம். தேர்தலை பிற்போடும் நோக்கம் எமக்கு கிடையாது என அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
