நாயைப்போல சுட்டு வீதியில் வீசப்பட்ட ஊடகவியலாளர்! கேட்டு மகிழ்ந்த மகிந்த
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க (Lasantha Wickramatunga) மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு பலதரப்பட்ட காரணங்கள் தெரிவிக்கப்பட்டது.
தென்னிலங்கை இராணுவத்தரப்பினர் இந்த கொலையை செய்யவில்லை என்ற அடிப்படையில், வேறு ஒரு தரப்பினர்தான் இதனை செய்தனர் என வெளிகாட்ட இந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்காலாம் என காரணங்கள் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தங்களுக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினால் மிருகத்தை கொல்வதை போல கொன்று புதைத்துவிடுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தரப்பு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையாகவே லசந்த விக்ரமதுங்க அந்த துப்பாக்கியால் படுகொலை செய்யப்பட்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இந்தநிலையில், லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மாத்திரமன்றி அவருடைய படுகொலை சம்பவத்தின் விசாரணைகளுமே மிகவும் விசித்திரமாகவும் அநீதியின் உச்சத்திலும் கொண்டு செல்லப்பட்டது.
இதில்,
- புதைக்கப்பட்ட அவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
- ஒரு புலனாய்வு அதிகாரி தான்தான் லசந்தவை கொலை செய்ததாக தெரிவித்து விட்டு உயிர்மாய்த்துகொண்டார்.
- லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான் (otabaya Rajapaksa) காரணமென அமெரிக்காவில் (United States) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும், எந்தவொரு அநீதிக்கும் இலங்கையில் நீதி கிடைக்காது என்பதை லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தற்போது வரை நினைவூட்டி வருகின்றது.
இந்த படுகொலை சம்பவத்தின் அடுத்த கட்டம், எடுக்கப்படும் நடவடிக்கை, இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் பலதரப்பட்ட உண்மைகள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
