மகிந்தவுக்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் வீடுகளை வழங்க தமிழர் ஒருவர் உட்பட நால்வர் முன்வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த வீடுகள் கொழும்பு 07 ரோஸ்மீட் பிளேஸ், வார்டு பிளேஸ், உட்பட இரண்டு மூன்று பகுதிகளில் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வீடு வழங்க முன்வந்தோர்
அத்துடன், குறித்த நான்கு வீடுகளில் ஒன்றைப் பார்க்க வருமாறு தனக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், தான் இன்னும் செல்லவில்லை என்று லக்ஷ்மன் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடுகளை வழங்க வேறு சிலர் முன்வந்துள்ளதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளியேறிய மகிந்த
இந்த நிலையில், மகிந்த ராஜபக்ச கொழும்புக்குத் திரும்புவாரா என்பது குறித்து இன்னும் ஒரு குறிப்பிட்ட அறிக்கையை வெளியிடவில்லை என்றும், தேவைப்படும்போது கொழும்புக்குத் திரும்புவார் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
ஜனாதிபதிகளின் சிறப்புரிமை ரத்து சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இன்று வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
