மாகாண சபைத் தேர்தல் குறித்து பிரதமரின் அதிரடி அறிவிப்பு
நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
இது குறித்து மேலும் உரையாற்றிய பிரதமர், மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்று அதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியதன் பின்னரே தேர்தல் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்க முடியும்.

தற்போதுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகள் காரணமாகவே தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சட்டத்தை மாற்றி புதிய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதா? அல்லது அதில் திருத்தம் செய்து பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்துவதா? என்பது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றின் ஊடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும்“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்