மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சந்தேகம்!
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சட்டம் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாது என செய்திகள் வெளியாகி வருகின்றன.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குப் பயன்படுத்தப்படவிருந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறை கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இரத்து செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் ஆரம்பிக்க வேண்டாம் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த தேர்தல் முறைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும், தேர்வுக் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய தேர்தல் முறை
எனினும், இவ்வாறு கொண்டுவரப்பட்ட புதிய தேர்தல் முறையும் தற்போது செயல்படவில்லை.

இது தொடர்பில் குறுகிய காலத்தில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது என்பதால், அரசாங்கம் கொண்டு வரவிருக்கும் புதிய அரசியலமைப்பின் கீழ் மாகாண சபைகள் தொடர்பில் அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாது என்பது உறுதியாகத் தெரியவருகிறமை குறிப்பிடத்தக்ககது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |