ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த எம்பாப்பே - நேரில் சந்தித்து ஆதரவு(காணொளி)
கைலியின் எம்பாப்பே அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளார்.
PSG-ன் முதல் தோல்விக்குப் பிறகு எம்பாப்பே உள்ளிட்ட சில வீரர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அமெரிக்காவிற்கு தனது நண்பருடன் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
இந்த விடுமுறையை பயன்படுத்திக்கொண்ட எம்பாப்பே, தனது சக வீரரும் நண்பருமான அக்ரஃப் ஹக்கிமியுடன் நியூயார்க் சென்றார்.
மருத்துவமனைக்கே சென்று சந்தித்துள்ளார்
கைலியின் எம்பாப்பே விடுமுறைக்காக சென்றாலும், அந்த பயணத்தை அவர் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். அங்கு தவிர்க்கப்படமுடியாத ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்துள்ளார்.
ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனான அமெரிக்க மருத்துவமனைக்கே சென்று சந்தித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், எம்பாப்பே நோவா என்ற குறித்த சிறுவனை திடீரென பார்வையிட்டு கைகுலுக்கி ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுவன், ஆடம்ஸ் ஆலிவர் என்கின்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தொண்டு நிறுவனங்களுக்கு உதவி
கைலியின் எம்பாப்பே இதுபோல பல நற்செயல்களை செய்துள்ளார்.
2018-ஆம் ஆண்டைப் போலவே, கத்தாரில் நடைபெற்ற 2022 FIFA உலகக் கோப்பையிலும் தனக்கு கிடைக்கக்கூடிய அனைத்து மேலதிக கொடுப்பனவுகளையும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
