ரஷ்யாவின் உளவியல் யுத்தம் - உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை
russia
ukraine
psychological war
By Sumithiran
ரஷ்யாவின் உளவியல் யுத்தம் தொடர்பாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனிய தலைநகர் கீவ் மீதான தாக்குதல்கள் தொடர்பாக ரஷ்யா எச்சரித்த நிலையிலேயே, உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், தகவல் தொடர்புகளை சீர்குலைக்க ரஷ்யா முதலில் திட்டமிட்டதாக கூறியுள்ளார்.
அதன் பின்னர், உக்ரைனிய இராணுவம்-அரசியல் தலைமை சரணடைவதற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் போலிச் செய்திகள் பெருமளவில் விநியோகிக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"போலிச் செய்தியை நிரூபிக்க, அவர்கள் கையெழுத்திட்ட ஆவணங்களின் புகைப்படங்களையும், போலி வீடியோவையும் வெளியிடுவார்கள். அவை பொய்" என்று ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறியுள்ளார்.
