உடனடியாக வெளியிடவும்..! சிறிலங்கா காவல்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்பு

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Prevention of Terrorism Act
By Kanna Oct 10, 2022 11:11 AM GMT
Report

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை உடனடியாக வெளியிடுமாறு இலங்கை காவல் திணைக்களத்துக்கு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு பணித்துள்ளது.

கொழும்பைச் சேர்ந்த சுரேன் டி பெரேரா என்பவரால் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் மீதான விசாரணையின் முடிவில் வெளியிடப்பட்ட தீர்ப்பிலேயே இவ்வாறு பணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் (2021) நவம்பர் 20 ஆம் திகதி இலங்கை காவல் திணைக்களத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொழும்பைச் சேர்ந்த சுரேன் டி பெரேரா என்பவரால் 01.01.2019 முதல் 20.11.2021 வரையான காலப்பகுதிக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களும் விரிவாகக் கோரப்பட்டிருந்தன.

தகவல்களை வழங்க முடியாது

உடனடியாக வெளியிடவும்..! சிறிலங்கா காவல்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்பு | Pta Act In Sri Lanka Police

அவரது கோரிக்கைக்கு அமையத் தகவல்களை வழங்க முடியாது என காவல்துறை திணைக்களத் தகவல் அதிகாரி நவம்பர் 27ஆம் திகதி பதிலளித்ததைத் தொடர்ந்து, தகவல் கோரியவர் காவல்துறை திணைக்களத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீடு செய்தார்.

குறித்தளிக்கப்பட்ட அதிகாரியும், தகவல் அதிகாரியின் பதிலுடன் முன்னுக்குப்பின் முரண்படும் வகையில் "தகவல் வழங்க முடியாது" என 2022 ஜனவரி 22 இல் பதிலளித்துள்ளார்.

இரு தரப்பிடமிருந்தும் தனக்குக் கிடைத்த பதில்களில் அதிருப்தி அடைந்த தகவல் கோரிய சுரேன் டி பெரேரா தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் 2022 மார்ச் 08 ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேன்முறையீடு மீதான விசாரணைகள் கடந்த மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது. ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் தலைமையில், ஓய்வுபெற்ற நீதியரசர் ரோகினி வல்கம மற்றும் ஆணைக்குழுவைச் சேர்ந்த சட்டத்தரணிகள் கிசாலி பின்தோ ஜெயவர்த்தன, ஜகத் லியன ஆராச்சி ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணை மீதான தீர்ப்பு கடந்த 06 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தீர்மானப்படி, காவல் திணைக்களத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த வருடம் நவம்பர் 20 ஆம் திகதி கொழும்பைச் சேர்ந்த சுரேன் டி பெரேரா என்பவரால் கோரப்பட்ட அனைத்துத் தகவல்களையும் எதிர்வரும் ஒக்ரோபர் 28 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் என்றும் இலங்கைப் காவல் திணைக்களம் ஆணைக்குழுவின் தீர்ப்புக்கமையச் செயற்படத் தவறும் பட்சத்தில், காவல்துறை திணைக்களத்துக்கு எதிராகவும், அதன் தகவல் அலுவலருக்கு எதிராகவும் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும், அவர்கள் விடுவிக்கப்பட்ட பின் சமூக மயப்படுத்தப்படுதல் தொடர்பிலும் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தனது ஆழ்ந்த கரிசனையையும் வெளிப்படுத்தியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026