மன்னார் நகரசபையின் புதிய செயலாளரின் ஆணவ பேச்சு: கடும் குற்றச்சாட்டு
மன்னார் (Mannar) நகரசபை செயலாளர் மீது அப்பகுதி குத்தகைதாரர்களால் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபை எல்லைக்குள் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படாமை தொடர்பில் நகரசபை செயலாளரிடம் முறையிட சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் நகரசபைக்கு சொந்தமான நகரசபை பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாடு
இந்தநிலையில், குறித்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்யுமாறு கோரி எழுத்து மூல முறைப்பாடு ஒன்று மன்னார் நகரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனுமதி கிடைக்க பெற்றும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை தொடர்ந்துள்ளது.
புதிய செயலாளர்
இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் குத்தகைதாரர் நகரசபை செயளாலரை சந்தித்து முறையிட சென்றுள்ளார்.
இதன்போது, நகரசபை செயலாளர் உரிய விதமாக பதிலளிக்காமல் நகரசபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகஸ்தரை அழைத்து மரியாதை குறைவாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குத்தகை தாரர்கள்
அத்தோடு, உங்களால் கண்ட கண்டவர்கள் என்னிடம் கேள்வி கேட்பதாக உத்தியோகஸ்தரிடம் ஆணவமாக செயலாளர் பேசியுள்ளதுடன் முறைப்பாடு மேற்கொள்ள சென்றவரிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.
குறித்த புதிய செயலாளர், தொடர்சியாக நகரசபை உத்தியோகஸ்தர்களுடன் முரண்படுவதுடன் முறைப்பாடுகள் மேற்கொள்ள வரும் போது மக்களிடமும் அவமரியாதையாக நடந்து கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நகரசபை தொடர்பில் வழங்கப்படும் பல்வேறு முறைப்பாடுகளை நிறைவேற்றாமல் கிடைப்பில் வைத்துள்ளதாக மன்னார் நகரபகுதியில் நகரசபைக்கு சொந்தமான நிறுவனங்களை குத்தகைக்கு பெற்று நடாத்தும் குத்தகைதாரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
