மேலும் பல இலங்கைப் பணிப்பெண்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
Sri Lanka
Government Of Sri Lanka
By Kalaimathy
இலங்கை பணிப்பெண்கள் 76 பேர் ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் 36 பேர் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு சென்று பணிபுரிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தீர்மானம்
இதேவேளை, பணியகத்தில் பதிவு செய்யாது, வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளுக்காக செல்வோருக்கு, எதிர்வரும் காலத்தில் பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சம் வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாது தொழில் வாய்ப்பிற்கு செல்வது, நாட்டின் சட்டங்களை மீறும் செயலாகும்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி