கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பகிரங்க சவால்

Sri Lanka Police Colombo Gajendrakumar Ponnambalam Udaya Gammanpila
By Vanan Aug 26, 2023 06:37 AM GMT
Report

துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள காவல்துறையினரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,  கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இந்தச் சவாலை விடுத்துள்ளார். 

வெட்கக்கேடான விடயம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பகிரங்க சவால் | Public Challenge To Gajendrakumar Ponnambalam

முற்றுகையிடுவோம் வாருங்கள் - சிங்களவர்களுக்கு அழைப்பு

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,  “காவல்துறையினரைக் கண்டபடி விமர்சித்து அரசியல் செய்யும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போது காவல்துறையினரை தனது கொழும்பு வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்பிற்கு நிறுத்தியுள்ளார். இது அவருக்கு வெட்கக்கேடான விடயம்.

வடக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும், தெற்கில் சிங்களவர்கள் மத்தியிலும் இனவாத கருத்துக்களால் தனது அரசியலை முன்நகர்த்துகின்றார் கஜேந்திரகுமார்.

 கொழும்பில் மக்களின் எதிர்ப்புக்குப் பயந்த அவர், முன்கூட்டியே பெருமளவு காவல்துறையினரை தனது வீட்டுக்கு வரவழைத்து பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளார்.

கஜேந்திரகுமாருக்கு துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள காவல்துறையினரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வரட்டும்” என சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள வதிவிடம் முற்றுகை

கஜேந்திரகுமாரின் வீட்டிற்கு முன் பிக்கு தலைமையிலான ஆர்ப்பாட்டம் - குவிக்கப்பட்ட இராணுவத்தினர் (படங்கள்)

இதேவேளை, கொழும்பில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வதிவிடத்தை  நேற்று முற்றுகையிட்ட தமது நகர்வு இலங்கையில் உள்ள சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நடவடிக்கையின் ஆரம்பம் என பௌத்த பிக்கு தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழு சூளுரைத்துள்ளது.

கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடங்களை முற்றுகையிடுமாறு கடும்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அழைப்பு விடுத்த நகர்வை அடுத்து நேற்று இந்த முற்றுகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவத்தை அடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வதிவிடப்பகுதியில் அதிகளான காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது பாதுகாப்பற்ற நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வதிவிடம் இருப்பது அவரது கட்சி ஆதரவாளர்களை கவலையடையச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026