எட்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன வன அதிகாரி : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
Sri Lanka Police
Missing Persons
Puttalam
Sri Lankan Peoples
By Sumithiran
கடந்த மே 2017 முதல் காணாமல் போயுள்ள புத்தளம்(puttalam) மாவட்ட வனவிலங்கு அலுவலகத்தில் பணிபுரிந்த மேலதிக நிர்வாக வன அதிகாரி ஒருவரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
வனத்துறை அதிகாரியின் மனைவி 2017 மே 30 அன்று நிட்டம்புவ காவல்துறையில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டதாக அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
காணாமல் போன நபரைக் கண்டுபிடிக்க மேலும் விசாரணை
எனினும், நவம்பர் 17, 2023 அன்று குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன நபரைக் கண்டுபிடிக்க மேலும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
நிட்டம்புவவையைச் சேர்ந்த 47 வயதுடைய நபரைக் கண்டுபிடிக்க சிஐடி பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்