இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்! பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறையினர்
CID - Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Independent Writer
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கடத்தல்காரர் ஒருவரை கைதுசெய்ய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெவிநுவர பகுதியைச் சேர்ந்த லோஸ் பட பெதிகே சந்துன் வெலான் என்ற இளைஞனே இவ்வாறு காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.
பொதுமக்களிடம் உதவி
இதனால் பொதுமக்களிடம் உதவி கோரி, குறித்த போதைப்பொருள் கடத்தல்காரரின் புகைப்படம் ஒன்றை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 071 859 1876 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி