தொலைதூரப் பேருந்துகளில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நீண்ட தூர பயணங்களின் போது பெறுமதியான பொருட்களை எடுத்துச் செல்கையில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு காவல் திணைக்களம் இன்று (11) அறிவித்துள்ளது.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சாதாரண பயணிகளைப் போல நீண்ட தூரப் பேருந்துகளில் ஏறி பயணிகளின் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டு செயற்படுகின்றனர் என்றும்.
தொலைதூரப் பேருந்து
அண்மைக்காலங்களில் அவர்களினால் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதனால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு உச்சரிக்கப்படுகிறது.
எனவே பயணிகள், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக பதுளை - கொழும்பு தொலைதூரப் பேருந்துகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |