“தமிழினப் படுகொலைக் கையேடு” இரு பாகங்களாக வெளியாகவுள்ள புத்தகம்!
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாக கருதப்படும் தமிழினப் படுகொலையின் சாட்சியமாக “தமிழினப் படுகொலைக் கையேடு” எனும் புத்தகம் பிரித்தானியாவில் வெளியிடப்படவுள்ளது.
மேற்படி புத்தகமானது பி.தட்ஷாவினால் எழுதப்பட்டு நான்கு மொழிகளில் பாகம் - 01 மற்றும் பாகம் - 02 என்ற அடிப்படையில் தமிழர் களரியினால் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவானது எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
தமிழினப் படுகொலை
மேலும், இந்த நிகழ்வானது ஞானலிங்கேஸ்வரர் ஆலயம், யுரோபாபிளாஸ் 01, 3008 பேர்ன், சுவிட்ஸ்சர்லாந்தில் (Europaplaz 01, 3008 Bern, Switzerland) மாலை 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக விராஜ் மெண்டிஸ், நிராஜ் டேவிட் மற்றும் ஜீட் லால் பெர்னா ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |