விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த தளபதி தாயார் மறைவு
Trincomalee
Tamil nadu
By Vanan
திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த தளபதி புலேந்திரனின் தாயார் சுந்தராம்பாள் குணநாயகம் தமிழகத்தில் மரணமடைந்துள்ளார்.
அவருடைய இறுதி நிகழ்வில் தென்னிந்திய முன்னணி பாடகர் தேனிசை செல்லப்பா கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் மூத்த தளபதி புலேந்திரன், இலங்கை கடற்பரப்பில் பயணித்த வேளை சிறிலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு பிடிப்பட்டவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்திய படைகள் மேற்கொண்டிருந்த முயற்சியின் போது, 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு அவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
